மேலும் செய்திகள்
பினாயூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
06-Nov-2025
மாணவிக்கு லவ் டார்ச்சர் துணை நடிகர் ஏஜன்ட் கைது
06-Nov-2025
ஒரகடத்தில் 10ல் தொழில் பழகுநர் மேளா
06-Nov-2025
கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு
06-Nov-2025
செங்கல்பட்டு:நாட்டின் 18வது லோக்சபா தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கடந்த 25ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி வேட்பாளர்கள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., சார்பில் பிரேம்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.அப்போது, செங்கல்பட்டில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். த.மா.கா., கட்சி வேட்பாளர் வேணுகோபால், 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார் மற்றும் செங்கல்பட்டு தி.மு.க., நகர செயலர் நரேந்திரன் ஆகியோர் மீது, தலா ஒரு வழக்கு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பதியப்பட்டு உள்ளது.அதே போல, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது இரண்டு வழக்குகளும், வேணுகோபால் மீது மூன்று பிரிவுகளில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
06-Nov-2025
06-Nov-2025
06-Nov-2025
06-Nov-2025