மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
4 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
4 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
4 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பி.எஸ்.கே., தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் நீரேற்றும் நிலையத்தை ஒட்டி, மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது.இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், பி.எஸ்.கே., குறுக்கு தெருவில் பெய்யும் மழைநீர், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கழிவுநீர் 'ரிடர்ன்' ஆகி, மழைநீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது.இதனால், பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் இத்தெருவில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்குவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, கழிவுநீர் நீரேற்றும் நிலையத்தை ஒட்டியுள்ள கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பி.எஸ்.கே., தெரு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago