உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடையை மீறி சென்ற லாரிகள் மோதல்

தடையை மீறி சென்ற லாரிகள் மோதல்

படப்பை,:வண்டலுார் - --வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், வண்டலுார் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி, படப்பை அருகே சாலமங்கலம் பகுதியை கடந்து சென்றபோது திடீரென சாலையோரம் நின்றது.அப்போது, பின்னால் பாறைக் கற்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி, கன்டெய்னர் லாரியின் மீது மோதியது. இதில், டாரஸ் லாரியின் முன்பக்கம் சேதமானது. இந்த லாரியை ஓட்டிச் சென்ற கருணாநிதி, 56, என்பவரின் இரு கால்களும் நசுங்கியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், ஓட்டுனர் கருணாநிதியை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படப்பையில் பாலப்பணி

வண்டலுார்- - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை பஜார் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த, படப்பை பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த சாலையில் ஒரகடம் முதல், வண்டலுார் வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதை பொருட்படுத்தாமல் கனரக வாகனங்கள் ஒரகடத்தில் இருந்து, வண்டலுார் வரை படப்பை வழியே செல்வதால் நெரிசல் விபத்து ஏற்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி