| ADDED : ஆக 01, 2024 01:17 AM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, பேரூராட்சி நிர்வாகம் தரம் பிரிக்கிறது.இந்த குப்பையை தரம் பிரிக்கும் ஒப்பந்தத்தை, பேரூராட்சி நிர்வாகத்திடம் இருந்து, விதைகள் தன்னார்வலர் அமைப்பு வாயிலாக செய்யப்படுகிறது.இதில், பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் சிலர், குப்பையை குடியிருப்பு பகுதிகளில் சேகரித்து, ஆங்காங்கே எரித்து விடுகின்றனர். இதனால், மாசு ஏற்படுவதாக காஞ்சிபுரம் கலெக்டரிடம், மின்னஞ்சல் வாயிலாக புகார் மனு அளித்துள்ளனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து, குப்பையை முறையாக தரம் பிரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.