உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா பல்கலையில் கணினி ஆய்வகம் திறப்பு

சங்கரா பல்கலையில் கணினி ஆய்வகம் திறப்பு

ஏனாத்துார்:காஞ்சிபுரம் ஏனாத்துார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் புதியதாக நிறுவப்பட்ட ‛பின்டெக்' கணினி ஆய்வகத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியரும் மற்றும் பல்கலை சார்பு துணைவேந்தருமான முனைவர் வசந்த்குமார் மேத்தா வரவேற்றார். பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஸ்ரீனிவாசு தலைமை வகித்தார்.சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எம்.வி. ராவ் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.விழாவில், நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை நிர்வாகி சேகர், பல்கலை பதிவாளர் பேராசிரியர் முனைவர் ஸ்ரீராம் மற்றும் பொறியியல் துறைகளின் டீன் பேராசிரியர் முனைவர் ரத்தினகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை