உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு சூப்பர் சக்கர் வாகனம் வாடகைக்கு பயன்படுத்த மாநகராட்சி முடிவு

கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு சூப்பர் சக்கர் வாகனம் வாடகைக்கு பயன்படுத்த மாநகராட்சி முடிவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, 51 வார்டுகளில், 40 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம், 1975ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.பாதாள சாக்கடை குழாய், ஆள் இறங்கு தொட்டி ஆகியவற்றில் ஏற்பட்ட அடைப்பு, கழிவுப்பொருட்கள் தேக்கம் காரணமாக, பல வார்டுகளில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறி, தெருக்களில் ஆறாக ஓடுகிறது.இவற்றை சரி செய்ய, மாநகராட்சி சார்பில், 'ஜெட்ராடிங்' எனப்படும் கழிவுநீர் அடைப்பு நீக்கும் வாகனம் செயல்பாட்டில் உள்ளது.இந்த வாகனங்கள் மாநகராட்சி முழுதும் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபடுத்தினாலும், கழிவுநீர் பிரச்னையை சரி செய்ய முடியவில்லை.இந்நிலையில், 'சூப்பர் சக்கர்' எனப்படும் அதிநவீன அடைப்பு நீக்கும் வாகனத்தை மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.இதன் வாயிலாக, அதிக அழுத்தம் காரணமாக, ஆள் இறங்கும் தொட்டி மற்றும் குழாய்களில் தேங்கியுள்ள கசடு, மண், கல் என அனைத்தையும் அகற்ற முடியும் என,மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தனியார் நிறுவனத்திடம் இருந்து கொண்டு வந்து, 10 நாட்களாக இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அடுத்த ஒரு மாதத்திற்கு, வாடகை அடிப்படையில், இந்த வாகனத்தை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.இதற்காக, 10 லட்ச ரூபாய்க்கு மாநகராட்சி நிர்வாகம் 'டெண்டர்' விட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநகராட்சியில்,கழிவுநீர் பிரச்னை அதிகம் உள்ள 23 தெருக்களை அடையாளம் கண்டுஉள்ளோம். அங்கு, இந்த சூப்பர் சக்கர் வாகனத்தை பயன்படுத்தி, கழிவுநீர்அடைப்பை சரி செய்ய துவங்கி உள்ளோம்.தனியார் நிறுவனத்திடம் இருந்து இந்த வாகனத்தை கொண்டு வந்துள்ளோம். அடுத்த ஒரு மாதம் இந்த வாகனத்தை பயன்படுத்தி, பெரும் பாலான தெருக்களில் கழிவுநீர் பிரச்னையை சரி செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி