உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளூர் - சோகண்டி சாலையில் மாடுகள் உலவுவதால் ஆபத்து

பள்ளூர் - சோகண்டி சாலையில் மாடுகள் உலவுவதால் ஆபத்து

காஞ்சிபுரம்: பள்ளூர் - பரந்துார் - சோகண்டி வழியாக, சுங்குவார்சத்திரம் பகுதிக்கு பிரதான சாலை செல்கிறது. இந்த சாலை ஓரத்தில், ஏகனாபுரம், தண்டலம், பரந்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.காலை நேரத்தில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும், மாலை நேரத்தில் மேய்ச்சல் முடிந்தும் ஆடு, மாடுகளை ஓட்டி செல்கின்றனர். பெரும்பாலான ஆடு, மாடுகள் சாலை ஓரம் செல்வதில்லை. மாறாக, சாலை நடுவே தாறுமாறாக செல்கின்றன.இதனால், வேகமாக செல்லும் வாகனங்களில், ஆடு, மாடுகள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, ஏகனாபுரம், தண்டலம், நெல்வாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆடு, மாடுகள், பள்ளூர் - சோகண்டி சாலை நடுவே செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுகிறது.எனவே, கால்நடை வளர்ப்போர் சாலை நடுவே ஆடு, மாடுகள் ஓட்டி செல்வதை தவிர்த்து, சாலை ஓரங்களில் ஓட்டி செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை