உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேத சிக்னல் கம்பத்தால் நெடுஞ்சாலையில் அபாயம்

சேத சிக்னல் கம்பத்தால் நெடுஞ்சாலையில் அபாயம்

பிள்ளைச்சத்திரம் : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது.இந்த சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாகவும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகின்றன.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வாயிலாக பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு, விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.எனினும், காரப்பேட்டை, வெள்ளைகேட், வேடல் ஆகிய கிராமங்களில் இருக்கும் மீடியனில் புல், செடி, கொடிகள் புதர்மண்டி காணப்பட்டது.அதை, தேசிய நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் புல் வெட்டும் இயந்திரத்தின் வாயிலாக, தேவையற்ற களைச்செடிகளை அகற்றினர். அழகுச்செடிகளில் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர்.ஆனால், இத்தடத்தில் மதுரமங்கலம் அடுத்த, பிள்ளைச்சத்திரம் கூட்டுச்சாலை, மீடியனில் இருக்கும் சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.பெங்களூரு, வேலுார், காஞ்சிபுரம் மார்க்கத்தில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு, இந்த கம்பத்தால் இடையூறு ஏற்படுகிறது.பிள்ளைச்சத்திரம் கூட்டுச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள சாய்ந்த சிக்னல் கம்பத்தை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ