உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விருதசீர நதி குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை

விருதசீர நதி குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை

பிச்சிவாக்கம்:காஞ்சிபுரம் அடுத்த பிச்சிவாக்கம் கிராமத்தில் இருந்து, அரக்கோணம் செல்லும் சாலையில், தக்கோலம் விருதசீர நதி குறுக்கே தரைப்பாலம் செல்கிறது.இந்த தரைப்பாலத்தின் வழியாக, அரக்கோணத்தில் இருந்து பிச்சிவாக்கம், பேரம்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், கடம்பத்துார், மப்பேடு, திருவள்ளூர் ஆகிய பல்வேறு பகுதிக்கு, டூ - வீலர் மற்றும் பிற வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.மழைக்காலத்தில், தக்கோலம் விருதசீர நதி தரைப்பாலத்தின் வழியாக, வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் போது, வாகனங்கள் தண்ணீரில் மிதந்து செல்ல வேண்டி உள்ளது.மழைக்காலத்தில் வாகன விபத்து தவிர்க்க, தக்கோலம் விருதசீர நதி குறுக்கே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.அனந்தாபுரம், கேசாவரம், பிச்சிவாக்கம் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.எனவே, வாகன விபத்து தவிர்க்கவும், மழைக்காலங்களில் தடையின்றி போக்குவரத்து பயன்பாட்டிற்கும் தக்கோலம் விருதசீர நதி குறுக்கே, உயர் மட்ட தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என, பல தரப்பு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ