உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுகளத்துார் ஏரியை துார்வார வலியுறுத்தல்

சிறுகளத்துார் ஏரியை துார்வார வலியுறுத்தல்

உத்தரமேரூர்:உத்தரமேரூர் ஒன்றியம், சிறுகளத்துார் கிராமத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி சிறுகளத்துார் மற்றும் புத்தளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.சில ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், ஏரிக்கரை சீரமைத்தல் மற்றும் மதகுகள் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.எனினும், ஏரி நீர் பிடிப்பு பகுதி, பல ஆண்டுகளாக துார்வராமல் உள்ளது. இதனால், பருவமழை காலத்தில் போதுமான தண்ணீர் சேகரமாகாத நிலை இருந்து வருகிறது. மழைக்காலத்தில், ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் தேங்குவதால், ஏரி பாசன கடைகோடி நிலங்களுக்கு, இறுதி கட்ட பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.எனவே, சிறுகளத்துார் ஏரியை துார்வாரி ஆழப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி