உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அச்சம்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அச்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஊவேரிசத்திரம் துணை கிராமத்தில் இருந்து, புத்தேரி கிராமத்திற்கு செல்லும், 3 கி.மீ., துாரம் கிராமப்புற சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில், உயரழுத்தம் மற்றும் மின்மாற்றியில் இருந்து, மும்முனை மின்வழித்தடம் செல்கிறது.இதில், மும்முனை மின்கம்பிகள், சாலையோரத்தில் தாழ்வாக செல்கிறது. இதனால், அந்த சாலை வழியாக வைக்கோல் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது உரசினால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை, மின் விபத்து ஏற்படாத வகையில் இழுத்துக்கட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி