| ADDED : ஆக 20, 2024 05:32 AM
உத்திரமேரூர்: பசுந்தாள் உரம் என்கிற தக்கைப் பூண்டு விதைகள், முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதன்படி, உத்திரமேரூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில், இந்த விதைகள், இரண்டு மாதங்களாக விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஒரு விவசாயிக்கு, ஒர் ஏக்கர் வீதம், 20 கிலோ பசுந்தாள் உரம் விதைகள் வழங்கப்படுகின்றன. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு பசுந்தாள் உரம் விதைகள் 29,000 கிலோ வினியோக இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில், 15,000 கிலோ விதை விவசாயிகளுக்குவிற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்,உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல பகுதிகளில் பசுந்தாள் உரமாக விதைப்பு செய்துள்ள நிலங்களில், அவுரி மற்றும் தக்கைப்பூண்டு செடிகள் செழுமையாக வளர்ந்து காட்சிஅளிக்கிறது.இதுகுறித்து, மருதம் கிராம விவசாயிகள்கூறியதாவது:விவசாய நிலங்களில் சாகுபடிக்கு முன்னதாக பசுந்தாள் விதைகள் விதைத்து, இரண்டு மாதங்கள் வளர செய்கிறோம். பின் நிலத்தில் நீர் பாய்ச்சி, ஏர் உழுது, தழைகளை நிலத்திற்கு உரமாக்கி, பின் அடுத்த பயிரை நடவு செய்கிறோம்.இதனால், பயிருக்கு தேவையான சத்து கிடைத்து வளமாக விளைச்சல் கிடைப்பதோடு, உரம் செலவு குறைந்து விவசாயத்தில் கணிசமான லாபம் பெற முடிகிறது,இவ்வாறு அவர்கள் கூறினர்.