மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
5 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
6 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
6 hour(s) ago
சென்னை சேலையூர் காவல் நிலையம் அருகே, தாம்பரம் - - வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டி, கிருஷ்ணா நகரைச் சேர்ந்த காஜா, 55, என்பவருக்கு சொந்தமான பெட், தலையணை உற்பத்தி செய்யும் கடை உள்ளது. அதற்கான துணி, பஞ்சுகள் அங்கு இருப்பு வைக்கப்பட்டது. இதையொட்டி, பேக்கரி மற்றும் பிரியாணி கடைகளும் உள்ளன. இந்த நிலையில், நேற்று காலை, பேக்கரி கடையில் வெல்டிங் வேலை நடந்தது. அப்போது, அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி, பெட் கடையில் இருந்த பஞ்சில் விழுந்து தீ பிடித்து எரிந்தது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி, உயிர் தப்பினர். பஞ்சு கடையில் ஏற்பட்ட தீ, சற்று நேரத்தில் மளமளவென பரவி, அருகேயுள்ள பேக்கரி, பிரியாணி கடைகளிலும் பரவியது.தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், அடுத்தடுத்து மூன்று கடைகளிலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. இச்சம்பவத்தால், தாம்பரம் - வேளச்சேரி சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago