மேலும் செய்திகள்
சுற்றுச்சுவர் இல்லாத பண்ருட்டி கண்டிகை பள்ளி
05-Sep-2024
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சயில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர், பல்வேறு தேவைக்காக இப்பகுதியில் ஏராளமானோர், காரணித்தாங்கல் வழியாக நாள்தோறும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில், வைப்பூர் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, ஊராட்சி துாய்மை பணியாளர்கள் இந்த சாலையோரம் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதயில் வீசும் கடும் துர்நாற்றதால், அவ்வழியாகும் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அச்சத்தில் மாணவர்கள் சென்று வருகின்றனர்.தவிர, குப்பை குவியலில் இரைதேடி வரும் கால்நடைகள் நோய்வாய்பட்டு வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரிஞ்சம்பாக்கம் சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
05-Sep-2024