மயான கொள்ளை உற்சவங்கள்
கோவிந்தவாடி:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு, மயான கொள்ளை உற்சவம், இன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அலகு குத்திய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது மற்றும் மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு மாலை அணிவிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.அதேபோல், கொட்டவாக்கம் கிராமத்திலும் மயான கொள்ளை உற்சவம் இன்று நடைபெற உள்ளது. மேலும், கோவிந்தவாடி அகரம் காலனி கிராமத்தில், நாளை மயான கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது.