உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2023 - -24ம் ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான, 'என் கல்லுாரி கனவு' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.இதில், உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு விரிவாக கூறப்பட்டது. மருத்துவம், ஐ.ஐ.டி., விவசாயம், கலை, அறிவியல் போன்ற படிப்புகளும், உதவித்தொகை பற்றியும் விரிவாக கூறப்பட்டது.மாநில அளவில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் அதிக மதிப்பெண்ணாக, 600க்கு 563 மதிப்பெண் பெற்ற ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் கணேஷ்குமாரை, கலெக்டர் கலைச்செல்வி பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை