உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம்

காஞ்சிபுரம் : சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், நேற்று மதியம் 12:15 மணிக்கு காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு தன் குடும்பத்தினருடன் வந்தார்.கோவில் நிர்வாகம் சார்பில், ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் சிங்கப்பூர் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். காமாட்சியம்மனை தரிசனம் செய்த சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், தொடந்து காஞ்சி சங்கரமடத்திற்கு சென்றார். சங்கர மடத்தில் உள்ள மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வழிபட்டார். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை