உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஹாக்கியில் எஸ்.ஆர்.எம்., சாம்பியன் நெல்லையை வீழ்த்தியது

ஹாக்கியில் எஸ்.ஆர்.எம்., சாம்பியன் நெல்லையை வீழ்த்தியது

சென்னை, மாநில அளவிலான ஓபன் ஹாக்கி போட்டியில், எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.மாநில அளவிலான ஓபன் ஹாக்கி போட்டி, திருநெல்வேலியில் கடந்த 23ல் துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லுாரி, கிளப் அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 4 - 1 என்ற கோல் கணக்கில் தமிழக போலீஸ் அணியை வீழ்த்தியது.விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., - நெல்லை எஸ்.டி.சி., அகாடமி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை