உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேவரியம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

தேவரியம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 37, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு கட்டுப்பாட்டில் 33 என, மொத்தம் 70 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் கீழ்பேரணநல்லுார் கிராமத்தில் துவக்கி வைத்தனர். தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில், நேற்று துவக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் அஜய்குமார் நெல் கொள்முதல் நிலையத்திற்கு பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை