உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆமைகள் இறப்பு அதிகரிப்பு கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு

ஆமைகள் இறப்பு அதிகரிப்பு கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு

சென்னை : சென்னை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை, உத்தண்டி, பனையூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள கடற்கரைகளில், அவ்வப்போது ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.நோய் பாதிப்பு, படகு, கப்பல்களில் மோதி காயமடைவது போன்ற காரணங்களால் ஆமைகள் உயிரிழந்து வருகின்றன. பின், கடல் அலையால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்குகின்றன. இவ்வாறு இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை, வனத்துறையினர் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், சில பகுதிகளில் இறந்த ஆமைகள், பல நாட்களாக அங்கேயே கிடக்கின்றன. இவற்றை பறவைகள் உண்பதுடன், அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி கடற்கரைக்கு செல்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை உடனே அப்புறப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ