உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காட்டரம்பாக்கம் - தாம்பரம் அரசு பஸ் இயக்க கோரிக்கை

காட்டரம்பாக்கம் - தாம்பரம் அரசு பஸ் இயக்க கோரிக்கை

இருங்காட்டுக்கோட்டை:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், இருங்காட்டுக்கோட்டை அருகே காட்டரம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. காட்டரம்பாக்கத்தில் அரசு துவக்கப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.இந்த இரண்டு பள்ளிகளில் அமரம்பேடு, சுதந்திரம்பேடு, காட்டரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 300 மாணவர்கள் பயில்கின்றனர்.மேலும், காட்டரம்பாக்கம் அருகே அமைந்துள்ள இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சமையல், ஹவுஸ்கீப்பிங், தோட்ட வேலை உள்ளிட்ட கூலி வேலைக்கு காட்டரம்பாக்கம் அருகே உள்ள அமரம்பேடு, நல்லுார், சோமங்கலம், மேலாத்துார், புதுபேர், பூந்தண்டலம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட சுற்றுபுறப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் செல்கின்றனர்.இந்த பகுதிகளில் இருந்து காட்டரம்பாக்கம் கிராமத்திற்கு செல்ல அரசு பேருந்து வசதி இல்லை. எனவே, காட்டரம்பாக்கத்தில் இருந்து, நல்லுார், சோமங்கலம் வழியே தாம்பரத்திற்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இந்த வழிதடத்தில் அரசு பேருந்து இயங்கினால், மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன் பெறுவார்கள் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி