உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாகலுாத்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

நாகலுாத்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், நாகலுாத்து மந்தவெளி தெருவில், மந்தவெளி அம்மன் மற்றும் தும்பவனத்து அம்மன் கோவிலில் 80வது ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.விழாவையொட்டி நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு மந்தவெளி அம்மன் மற்றும் தும்பவனத்து அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தலும் நடந்தது.இரவு 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மந்தவெளி அம்மன் மற்றும் தும்பவனத்து அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர். இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி