மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
17 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
17 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
17 hour(s) ago
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பல்லவர்மேடு மஹா தீப்பாஞ்சியம்மன் கோவில் மற்றும் குருவிமலையில் 21 அடி உயர ஆஞ்சநேயருக்கு நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் பல்லவர்மேடு, வ.உ.சி., தெருவில், மஹா தீப்பாஞ்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சமீபத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜை நடந்தது. நேற்று, காலை 7:30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட பம்பை, உடுக்கை, காவடி கைச்சிலம்பாட்ட கலைஞர்கள் சங்க தலைவர் வடிவேல் தலைமையில், மூலவர் அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.இதில் கோவில் நிர்வாகிகள் சங்கர் சுவாமிகள், யோகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய தீப்பாஞ்சியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். 21 அடி ஆஞ்சநேயருக்கு...
காஞ்சிபுரம் அடுத்த, குருவிமலை கிராமத்தில் புதிதாக 21 அடி உயர ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன.நேற்று, காலை 11:30 மணிக்கு, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில்,குருவிமலை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago