உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கள்ளச்சாராய வியாபாரி மீது குண்டாஸ்

கள்ளச்சாராய வியாபாரி மீது குண்டாஸ்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 56. இவர் மீது, கள்ளச்சாராயம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளன.சரித்திர பதிவேட்டு குற்றவாளியாகவும் இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், கணேசன் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் பரிந்துரை செய்தார்.அதன்படி, கள்ளச்சாராயம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய கணேசனை, ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரிவிட்டார். அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கணேசன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்