குறைந்தழுத்த மின் சப்ளை வேளியூர் காலனியினர் அவதி
வேளியூர், காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் கிராமத்தில், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது.இந்த துணை மின் நிலையத்தில் இருந்து, வேளியூர், வேளியூர் காலனி உள்ளிட்டபல்வேறு கிராமங்களுக்கு, மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.குடியிருப்பு, விவசாயம், தெரு விளக்கு,ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு மின்சாரம் அப்பகுதியினர் பயன் படுத்தி வருகின்றனர். இதில், வேளியூர் காலனி பகுதி குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், குறைந்தழுத்தத்தில் விநியோகிக்கப்படுகிறது. இதனால், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களைபயன்படுத்த முடியவில்லை என, அப்பகுதிகுடியிருப்புவாசிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.எனவே, வேளியூர் காலனி கிராமத்தில், குறைந்தழுத்த மின்சார விநியோகத்தை சரி செய்து, சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என, குடியிருப்புவாசிகள் இடையே கோரிக்கை எழுந்துஉள்ளது.