உள்ளூர் செய்திகள்

ஆண் சடலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, போந்துார் அருகே, சாலையோரம் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம்இருப்பதாக ஸ்ரீபெரும் புதுார் போலீசாருக்குதகவல் கிடைத்தது.அதன்படி அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை