மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
1 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
2 hour(s) ago
இன்று இனிதாக .... (11.10.2025) காஞ்சிபுரம்
6 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் பகவத் பாதாள் சன்னிதி, சுரேஷ் வராச்சாரியார் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த மூன்று சன்னிதிகளையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்று சன்னிதியிலும் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு, மே 3ம் தேதி மூன்று சன்னிதிகளுக்கும், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.தொடர்ந்து, தினமும் மூன்று கோவில்களிலும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. மேலும், இக்கோவில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நேற்று நடந்தது.இதில், சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் பகவத் பாதாள் சன்னிதி, சுரேஷ் வராச்சாரியார் சன்னிதிகளில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, துாப தீபாராதனை செய்தார்.நவநீத கிருஷ்ணர் கோவில்காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அனந்தஜோதி தெருவில், பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர் மற்றும் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மே 5ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. மண்டலாபிஷேகம் நிறைவு நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கலாசபிஷேகம், ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. மாலை சுவாமி வீதியுலா நடந்தது.
1 hour(s) ago
2 hour(s) ago
6 hour(s) ago