உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணிக்கவாசகர் குரு பூஜை விழா

மாணிக்கவாசகர் குரு பூஜை விழா

காஞ்சிபுரம்:காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், மாணிக்கவாசகர் குரு பூஜை விழா, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, மஹா தீபாராதனை, மலர் அலங்காரம் நடந்தது.காஞ்சி சிவனடியார் திருக்கூட்ட ஓதுவாமூர்த்திகள் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் பாராயணம் நடந்தது. இதில், காஞ்சி சிவனடியார் திருக்கூட்ட தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ