| ADDED : ஜூன் 18, 2024 05:48 AM
புள்ளலுார், : காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில் இருந்து, அரங்கநாதபுரம் கிராமத்திற்கு செல்லும், 2.5 கி.மீ., துாரம் ஏரிக்கரை மண் சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி, சாமந்திபுரம், வரதாபுரம், மூலப்பட்டு ஆகிய பல்வேறு கிராம மக்கள் புள்ளலுார் கிராமத்திற்கு, இருசக்கர வாகனம் மற்றும் நான்குசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த பிரதான மண் சாலையோரம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, பைப் லைன் அமைத்து உள்ளனர். இந்த பைப் லைன் அமைக்கும் பணிக்கு, பள்ளம் தோண்டியுள்ளனர். அதை மண்ணை கொட்டி சமப்படுத்தவில்லை.இதனால், அரங்கநாதபுரம் கிராமத்தில் இருந்து புள்ளலுார் கிராமத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது.எனவே, அரங்கநாதபுரம்- - புள்ளலுார் சாலையோரம் ஆபத்தாக இருக்கும் பள்ளத்தை மூட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.