மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
4 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
4 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
4 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய கோவிலில், நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாக நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால், கோவில் அமைந்துள்ள மேற்கு ராஜ வீதியில் கனரக வாகனம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.இருப்பினும், குமரகோட்டம் கோவில் அமைந்துள்ள பகுதியில், சாலையோரத்தின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.இந்நிலையில், மதியம் 12:05 மணிக்கு, காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், தெற்கு கோட்டம், செயற்பொறியாளரின் கார், மேற்கு ராஜ வீதியில் குமரகோட்டம் கோவிலுக்கு அருகில், சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நெரிசலை சமாளிக்க, மின்வாரிய அதிகாரி வந்த கார் டிரைவர் எங்கே என, தேடினர். பின் டிரைவரை வரவழைத்து, காரை எடுத்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago