உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோனேரியில் புதிய மின்மாற்றியால் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு

கோனேரியில் புதிய மின்மாற்றியால் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் செல்வ விநாயகர் நகர், புது நகர், தலையாரி தெரு மேட்டு தெரு உள்ளிட்ட பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்விசிறி, மிக்ஸி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.எனவே, குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இப்பகுதிக்கு என, புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அப்பகுதியினரின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ., எழிலரசன் புதிய மின்மாற்றி அமைக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, மின்வாரியம் சார்பில், 6 லட்சம் ரூபாய் செலவில் 100 கே.வி.ஏ., திறன் கொண்ட புதிய மின்மாற்றி நேற்று கோனேரிகுப்பம் ஊராட்சி, செல்வ விநாயகர் கோவில் தெருவில் அமைக்கப்பட்டது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை நேற்று இயக்கி வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சி புரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற் பொறியாளர் ஊரகம்அரிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ