உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத சுகாதார நிலையம்

கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத சுகாதார நிலையம்

காஞ்சிபுரம், வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு, புதிதாக ஒரு சுகாதார நிலையக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.இந்த கட்டடத்திற்கு, 1.25 கோடி ரூபாய் செலவில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை அறை, பிரசவ அறை, மருந்து இருப்பு வைக்கும் கிடங்கு உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.இந்த கட்டடத்திற்கு இரு மருத்துவர், ஒரு சுகாதார நிலைய செவிலியர் உள்ளிட்ட 15 பணியிடங்கள் ஏற்படுத்த அரசு அனுமதி வழங்கி உள்ளன. 2022 - 23ம் நிதி ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து, கடந்தாண்டு ஏப்ரலில் கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டு உள்ளன.இருப்பினும், ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என, கிராம மக்கள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் கூறியதாவது:சட்டசபை மானியக் கோரிக்கை நிறைவு பெற்ற பின், ஒதுக்கீடு செய்த பணிகளுக்கு பணியாளர்கள் நியமிக்க துறை நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம். விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி