மேலும் செய்திகள்
நவரை பருவத்திற்கு உழவு பணி துவக்கம்
15 hour(s) ago
அய்யப்பன் கோவிலில் மலர் பூஜை
15 hour(s) ago
சத்துணவு கூடத்தை இடிக்க எம்.எல்.ஏ., பரிந்துரை
15 hour(s) ago
மின் ஒயர்கள் திருட்டால் விவசாயிகள் பாதிப்பு
15 hour(s) ago
கடம்பத்துார்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தொடுகாடு ஊராட்சி பராசங்குபுரம் அடுத்து உள்ளது காட்டு கூட்டு சாலை சந்திப்பு.திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த காட்டு கூட்டு சாலை சந்திப்பு பகுதி வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, கனரக, இலகுரக வாகனம் என தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.தற்போது ஸ்ரீபெரும்புதுாரில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால் அனைத்து வாகனங்களும் தண்டலம் - அரக்கோணம் சாலையில் தான் சென்று வருகின்றன.இங்கு போக்குவரத்தை சீரமைக்க தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி சிக்னல் செயல்படாமல் உள்ளது. மேலும் போக்குவரத்தை சீர்படுத்த போலீசாரும் இல்லை.இதனால், இப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.எனவே, காட்டு கூட்டு சாலை சந்திப்பு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னலை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து காவலரை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago