உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இயந்திரம் கோளாறு தரையில் அமர்ந்து நபர் ஆவேசம்

இயந்திரம் கோளாறு தரையில் அமர்ந்து நபர் ஆவேசம்

இருங்காட்டுக்கோட்டை,:இருங்காட்டுக்கோட்டையில் முதல் நபர் ஓட்டளித்தபோது இயந்திரம் பழுதானது. 'ஓட்டளிக்காமல் வெளியே செல்லமாட்டேன்' என கூறி வாக்காளர் தரையில் அமர்ந்ததாார். ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 101வது எண் ஓட்டுச்சாவடியில் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்த கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 50 என்பவர், முதலாவதாக ஓட்டளிக்க சென்றார். அவரது கை விரலில் மை வைக்கப்பட்டு, இ.வி.எம்., இயந்திரத்தில் பட்டனை அழுத்திய போது, ஓட்டு பதிவாகவில்லை. அங்கிருந்த அதிகாரிகள் சரிபார்தபோது, அந்த இயந்திரம் பழுதாகியது தெரிய வந்தது. பாலாஜி, தன் விரலில் மை வைத்ததால், 'நான் ஓட்டளித்து பிறகு தான் வெளியே செல்லுவேன்' என கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். ஓட்டுச்சாவடி மையத்தின் தரையில் அவர் அமர்ந்தார். ஓட்டளிக்க வந்த வந்தவர்கள், இயந்திரம் தயாராகும் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.தகவல் அறிந்து மாற்று இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள், பழுதான இயந்திரத்தை சோதனை செய்தனர். இதில், அந்த இயந்தரத்தில் 'சீல்' வைக்கும் போது அரக்கு மெழுகு பட்டனில் பதிந்ததால் இந்திரம் பழுதானது தெரிய வந்தது. இதையடுத்து மெழுகை அகற்றி, இயந்திரம் சரிசெய்த பிறகு, 8:00 மணிக்கு மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது. ஒரு மணி நேரம் தரையில் அமர்ந்திருந்த வாக்காளர் பாலாஜி, இயந்திரம் சரிசெய்தபிறகு முதலாவதாக ஓட்டளித்த பின், மையத்தில் இருந்து வெளியேறினார்.

ஸ்ரீபெரும்புதுார்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில் 365 ஓட்டுச்சாவடி மையங்களில், காலை 7:00 மணி முதல், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது.இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், ஆயக்கொளத்துார் பகுதியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையம் எண்: 82ல், ஓட்டுபதிவு இயந்திரத்தில், பழுது ஏற்பட்டது. பின், நீண்ட நேரமாக பழுது சரி செய்யப்படாததால் வேறு இயந்திரம் மாற்றப்பட்டு, 8:30 மணி அளவில் மீண்டும் ஓட்டுபதிவு தொடங்கியது.அதேபோல, மாத்துார் ஊராட்சியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையம் 52ல், வி.வி.பேட் இயந்திரம் பழுதானது. திருமங்கலம் ஊராட்சி ஓட்டுச்சாவடி எண்:51ல் ஓட்டுப்பதிவு இயந்திரம், வி.வி.பேட் ஒப்புகை சீட்டு இயந்திரம் உள்ளிட்டவைகள் அனைத்தும் பழுதானதால் அனைத்து இயந்திரங்களும் மாற்றப்பட்டு, ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ