உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடை முன் பள்ளம் பஸ்சில் ஏற பயணியர் அவதி

நிழற்குடை முன் பள்ளம் பஸ்சில் ஏற பயணியர் அவதி

எடையார்பாக்கம்:மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கிராம கூட்டு சாலையில், பயணியர் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த நிறுத்தத்தின் வழியாக, துளசாபுரம்-, கண்டிவாக்கம், சவுட்டுபாளையம், அக்கமாபுரம் ஆகிய கிராம மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்கின்றனர்.எடையார்பாக்கம் கூட்டு சாலையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தின் ஓரமாக நிற்கும் பேருந்துகளில், பயணியர் ஏற முடியாத அளவிற்கு தாழ்வான பள்ளம் உள்ளது. குறிப்பாக, தார் சாலையை விட பேருந்து நிறுத்தத்தின் முன் பள்ளம் இருப்பதால், வயதான முதியவர்கள் மற்றும் கர்ப்பிணியர் பேருந்தில் ஏற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, எடையார்பாக்கம் கூட்டு சாலை பேருந்து நிறுத்தத்தின் முன் இருக்கும் பள்ளத்திற்கு ஏற்ப மண்ணை கொட்டி தார் சாலைக்கு இணையாக சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ