உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுதாமூரில் மயங்கி கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

சிறுதாமூரில் மயங்கி கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

அச்சிறுபாக்கம், ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுதாமூரில், செல்வம் என்ற விவசாயியின் மிளகாய் தோட்டத்தில், நேற்று முன்தினம், ஆண் மயில் ஒன்று மயங்கி கிடந்துள்ளது.மயங்கி கிடந்த மயிலை மீட்டு, வீட்டிற்கு கொண்டு வந்த விவசாயி, ஒரத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்படி, அப்பகுதிக்குச் சென்ற போலீசார், மயிலை கைப்பற்றி, அச்சிறுபாக்கத்தில் உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.அச்சிறுபாக்கம் வனத்துறையினர், மயிலுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, பின், நேற்று அச்சிறுபாக்கம் வனச்சரக அலுவலகத்தின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் மயிலை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை