உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி பாலதர்ம சாஸ்தா யானை வாகனத்தில் உலா

காஞ்சி பாலதர்ம சாஸ்தா யானை வாகனத்தில் உலா

காஞ்சிபுரம்: திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில் 8 ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், திருக்கல்யாண உத்சவம் கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, சித்தி, புத்தி கற்பக விநாயகருக்கு திருக்கல்யாண உத்சவமும், இரண்டாள் நாள் விழாவான கடந்த 8 ம் தேதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 9 ம் தேதி வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உத்சவமும், நான்காம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்சவமும் நடந்தது. திருக்கல்யாணம் உத்சவம் நிறைவு நாளான நேற்று காலை 10:00 மணிக்கு, பாலதர்ம சாஸ்தாவிற்கு சிறப்பு அபிேஷகம், பிரதிஷ்டா தினம், கலசாராதனை, பாலதர்ம சாஸ்தா புத்திர மூலமந்திர ஹோமம், 1008 சஹஸ்ரநாமம், கலச புறப்பாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு பாலதர்ம சாஸ்தா மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ