உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வயலக்காவூர் ஏரிக்கரையில் 1 லட்சம் பனை விதை நடும் விழா

வயலக்காவூர் ஏரிக்கரையில் 1 லட்சம் பனை விதை நடும் விழா

காஞ்சிபுரம் : விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், மூன்று ஆண்டுகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட 59 நீர்நிலைஒட்டியுள்ள கரையோர பகுதியில், மூன்று லட்சம் பனை விதைகள் நடவு செய்துள்ளனர்.இதில், நான்காவது ஆண்டில் 1 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய முடிவு செய்து, அதன் துவக்க விழா, வயலக்காவூர் ஏரிக்கரையில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை தலைமை அலுவலர் ரவி மீனா,1 லட்சம் பனை விதை நடவு செய்யும் திருவிழாவை துவக்கி வைத்து, பனை மரத்தின் அவசியம் குறித்து விளக்கவுரையாற்றினார். அதை தொடர்ந்து, வயலக்காவூர் ஏரிக்கரையில் இருந்து, நெய்யாடுப்பாக்கம் வரை, 10,000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நேற்று ஒரே நாளில் நடவு செய்யப்பட்டன.விழாவில், ஆதிகல்லுாரிநாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், திரிவேணி அகாடமி பள்ளி மாணவர்கள், பல்வேறு சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் பங்கேற்று, பனை விதையை நடவுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி