மேலும் செய்திகள்
கச்சபேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு எடுத்த பக்தர்கள்
19 hour(s) ago
கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் வனபோஜனம் உத்சவம்
19 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கவனிக்க, 16 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க, துணை கலெக்டர், தாசில்தார் என ஒரு குழுவே கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.இருப்பினும், மாவட்டம் முழுதும், கிராமப்புறங்களில் அனுமதியற்ற சுவர் விளம்பரம் செய்வது, அரசியல் கட்சியினர் புகைப்படங்கள் மறைக்காமல் இருப்பது, சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவது என, பல்வேறு விதிமீறல்கள் நடந்தபடி உள்ளன.இதன் தொடர்ச்சியாக, பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் துண்டு பிரசுரங்களில் அச்சகம் பெயரும், எத்தனை பிரதிகள் என்ற விபரம் இன்றி, துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றன.அச்சகம் பெயரும், பிரதிகள் எண்ணிக்கை இன்றி, ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படும் இந்த துண்டு பிரசுரங்கள் வேட்பாளர் செலவு கணக்கில் வரவு வைக்க வேண்டுமா என கேள்வி எழுந்துள்ளது.ஏற்கனவே அச்சக உரிமையாளர்களை அழைத்து, தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இருப்பினும், எத்தனை பிரதிகள் என்ற விபரம் கூட இல்லாமல், துண்டு பிரசுரங்களை அச்சடித்து அரசியல் கட்சியினருக்கு வழங்கி வருகின்றனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கூறுகையில், 'துண்டு பிரசுரங்களில் அச்சகம், பிரதிகள் எண்ணிக்கை விபரம் இல்லாதது பற்றி விசாரிக்கப்படும். வேட்பாளர் செலவு கணக்கில் துண்டு பிரசுரம் அச்சடிப்பு செலவு வரவு வைக்கப்படும்' என்றார்.
19 hour(s) ago
19 hour(s) ago