உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இஷ்டம் போல கட்டணம் வசூலிக்கும் தனியார் இ- - --சேவை மையங்கள்

இஷ்டம் போல கட்டணம் வசூலிக்கும் தனியார் இ- - --சேவை மையங்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழக அரசின் மின் ஆளுமை முகமை வாயிலாக, ஏற்கனவே 210 இ- - சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு புதியதாக 340 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டடன.அதன் அடிப்படையில், மாவட்டம் முழுதும் 550 இ- - சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதில், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகியவை நடத்தும் இ- - சேவை மையங்களும் அடங்கும்.அரசு துறைகளின் சேவை, சான்று என, அனைத்து சேவைகளுக்கும் இ- - சேவை மையங்கள் வாயிலாகவே, அனைவரும் விண்ணப்பம் செய்து சான்று பெற்று வருகின்றனர்.பட்டா பெயர் மாற்றம், ஜாதி, வருமானம், இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்று, விதவை சான்று, குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்வது என, அனைத்து சேவைகளுக்கும் இ- - சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர்.இதற்கு அரசின் சார்பில், 60 ரூபாய் முதல் சேவைக்கு ஏற்றவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால், பல இ- - சேவை மையங்களில், அரசு நிர்ணயித்த கட்டணங்களை பெறாமல், பல மடங்கு அதிக கட்டணம் கேட்பது தொடர் கதையாகி வருகிறது.பட்டா பெயர் மாற்றம் செய்ய 60 ரூபாய்க்கு பதிலாக 200 ரூபாயும், குடும்ப அட்டை விண்ணப்பம் செய்ய, 60 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.பொதுமக்களுக்கு கட்டண விபரம் தெரியாததால், வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு சேவைக்கும், இஷ்டம் போல் இ- -- சேவை மையங்கள் வசூலிக்கின்றன.கட்டண விபரங்களை, இ- - சேவை மையங்களில் வைக்காததால், விபரம் தெரியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் மையங்கள் மீது, மின் ஆளுமை முகமை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மின் ஆளுமை முகமையின் காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, புகார் அளித்தால் உடனடியாக, சம்பந்தப்பட்ட மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிக்க விரும்புவோர், கலெக்டர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள மின் ஆளுமை முகமை அலுவலகத்திலும் புகாராக தெரிவிக்கலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ