உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சென்னை ,திருவள்ளூர் மாவட்டங்களில் மழை

சென்னை ,திருவள்ளூர் மாவட்டங்களில் மழை

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் ,நாமக்கல் பெரம்பலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில்இன்று (23.07.2024) இரவு 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இதனையடுத்து சென்னைநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடையாறு, சாந்தோம், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை,வடபழனி ,கோடம்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர், புதுப்பேட்டை, ஆழ்வார் திருநகர், ராமாபுரம்,சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.புறநகர் பகுதிகளான கோயம்பேடு, நெற்குன்றம்,, பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், வானகரம், மதுரவாயல், குன்றத்தூர் குமணனசாவடி பகுதிகளில் மிதமான மழை மழை பெய்தது.திருவள்ளூர்: திருவள்ளூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணவாள நகர் கடம்பத்தூர் பேரபமபாக்கம்,பூண்டி வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை