உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெரும்பாக்கம் சாலையோரம் இடையூறு செடிகள் அகற்றம்

பெரும்பாக்கம் சாலையோரம் இடையூறு செடிகள் அகற்றம்

பெரும்பாக்கம், காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் இருந்து, விஷார் வழியாக பெரும்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக மேல்கதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம், முத்துவேடு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம் வளர்ந்திருந்த சீமைகருவேலம் உள்ளிட்ட பல்வேறு முட்செடிகள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்து இருந்தன.போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், கீழ்கதிர்பூரில் இருந்து, பெரும்பாக்கம் கிராமம் வரை, சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை