மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
5 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
5 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
5 hour(s) ago
குன்றத்துார், : சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் உள்ளது. 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்டம் 24 அடி உயரமும் உடையது.ஏரியின் உபரிநீரை வெளியேற்ற ஐந்து கண் மதகு மற்றும் 19 கண் மதகு என, இரண்டு இடங்களில் மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மழைக்காலத்தில், வினாடிக்கு 50 கன அடி முதல் 29,000 கன அடி நீர் வரை வெளியேற்ற முடியும். பருவமழை துவங்கும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் மதகுகளின் சீரமைப்பு பணி தற்போது நடந்து வருகிறது.பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏரி நிரம்பினால் தண்ணீர் திறந்துவிட ஏதுவாக, பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளோம். மதகில் சேதமுள்ளதா, எங்கெல்லாம் தண்ணீர் கசிவு இருக்கிறது என சோதிக்கிறோம். ஷட்டர் திறப்பதற்கு வசதியாக ரப்பர் சீல், ஆயில் சீல் மாற்றியமைத்தல், துருப்பிடிக்காமல் இருக்க பெயின்ட் அடித்தல் என, வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த பணிகள், 10 நாட்களுக்குள் நிறைவடையும்' என்றார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago