உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஈஸ்வரர் கோவிலில் அகற்றிய அரச மரம் மறு நடவு

ஈஸ்வரர் கோவிலில் அகற்றிய அரச மரம் மறு நடவு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ராஜவீதியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ், அருணாசல ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி மேற்கொள்ளப்படுகிறது.அதன் காரணமாக கோவிலையொட்டி இருந்த 25 ஆண்டுகால அரசமரம், அகற்ற தீர்மானிக்கப்பட்டது. அந்த மரத்தை வாலாஜாபாத், சாய் கார்டன் பகுதியில் மறு நடவு செய்ய 4வது வார்டு, பேரூராட்சி உறுப்பினர் வெங்கடேசன் தீர்மானித்தார்.அதன்படி, விதைகள் தன்னார்வ அமைப்பு உதவியுடன் அந்த அரச மரத்தை பெயர்த்தெடுத்து, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாய் கார்டன் பகுதிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.அங்கு அந்த மரத்தின் அளவு தேவைக்கேற்ப ஆழம் கொண்ட குழி தோண்டி, அதில் இயற்கை உரம் மற்றும் மருந்து கரைசலை தெளித்து அரசமரம் மறு நடவு செய்யப்பட்டது. அகற்றப்பட்ட மரம் இப்பகுதியில் மறுநடவு செய்ததை அப்பகுதியினர் வரவேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை