உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அக்கமாபுரத்தில் பாலம் அமைக்க கோரிக்கை

அக்கமாபுரத்தில் பாலம் அமைக்க கோரிக்கை

அக்கமாபுரம்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், அக்கமாபுரம் கிராமத்தில் இருந்து, ஏரிக்கரை வழியாக, எடையார்பாக்கம் கிராமத்திற்கு செல்லும், 2.5 கி.மீ., ஒன்றிய சாலை உள்ளது.முதல்வரின் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், 2022- - 23ம் ஆண்டு, ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக போடப்பட்டு உள்ளது. இந்த சாலை குறுக்கே எடையார்பாக்கம் ஏரியில் தண்ணீர் நிரம்பினால், உபரி நீர் கலங்கல் வழியாக செல்கிறது.மழைக்காலத்தில் சாலை குறுக்கே தண்ணீர் செல்லும் போது, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, அக்கமாபுரம் கிராமத்தினர் கண்டிவாக்கம் கூட்டு சாலை வழியாக எடையார்பாக்கம் கிராமத்திற்கு 1 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.இதை தவிர்க்க, அக்கமாபுரம்- - எடையார்பாக்கம் இடையே, சாலையை கடந்து செல்லும் தரைப்பாலத்தை, உயர்மட்ட பாலமாக கட்டித் தர வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ