உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு கலை அறிவியல் கல்லூரி வாலாஜாபாதில் ஏற்படுத்த கோரிக்கை

அரசு கலை அறிவியல் கல்லூரி வாலாஜாபாதில் ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாதில், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளது.வாலாஜாபாத் அடுத்த தென்னேரி மற்றும் நெய்யாடிவாக்கம் ஆகிய பகுதிகளில், அரசு மேல்நிலைப் பள்ளியும், பழையசீவரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.இந்த பள்ளிகளில், வாலாஜாபாத் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 மாணவ - மாணவியர் மேற்படிப்பிற்கு தயாராகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை பிளஸ் -2 தேர்ச்சி பெற்று கல்லூரி செல்லும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். இப்போதெல்லாம் மாணவ - மாணவியரின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களில், மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு சென்றவர்கள் போக மீதமுள்ள மாணவர்கள், காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டில் இயங்கும் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், பிற தனியார் கல்லூரிகளிலும் பயில்கின்றனர்.வாலாஜாபாத் சுற்றி கிராமங்களாகவும், விவசாயம் சார்ந்த பகுதிகளாகவும் உள்ளது. இதனால், கல்லூரி படிப்பை ஏற்கனவே அவர்கள் சிரமமாக எண்ணக்கூடிய நிலையில் உள்ளனர். இதில், போக்குவரத்து மற்றும் தூரம் காரணமாக மேற்படிப்பை தொடர்வதில் அவர்கள் பல்வேறு சிக்கலை சந்திக்கின்றனர். எனவே, வாலாஜாபாத் மையமாக கொண்டு சுற்றி உள்ள கிராம மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், வாலாஜாபாதில் அரசு கலை- அறிவியல் கல்லூரி ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை