மேலும் செய்திகள்
நேரு சந்தை வளாகத்தில் சிமென்ட் கல் சாலை சேதம்
7 hour(s) ago
சாய்ந்து விழும் நிலையில் சுடுகாடு சுற்றுச்சுவர்
7 hour(s) ago
காஞ்சி - செங்கை சாலையோரம் மண் குவியல் அகற்றம்
8 hour(s) ago
வீமீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
8 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் சிப்காட் சாலையில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர்.மேலும் வல்லக்கோட்டை, வல்லம், எறையூர், வடகால், பால்நல்லுார், மாத்துார், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணியர், மாத பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார நிலையம் வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே செல்லும் சிப்காட் சாலையில், வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால், சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு பின், இருசக்கர வாகனத்தில் செல்லும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர், சிப்காட் சாலையில் அதிவேகமாக செல்லும், கனரக வாகனங்களில் மோதி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. இதனால், பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன், ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வேகத்தடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago