உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடைக்கு நிழற்கூரை வசதி செவிலிமேடு வாசிகள் எதிர்பார்ப்பு

ரேஷன் கடைக்கு நிழற்கூரை வசதி செவிலிமேடு வாசிகள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் செவிலிமேடு கடை எண் - 1 என்ற ரேஷன் கடையில், 1,559 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் கடைக்கு வருவோர், 'பில்' போட வரிசையில் நிற்கும் இடத்திலும் கூரை வசதி இல்லை. இதனால், வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கத்திரி வெயில் முடிந்தும், காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.இதனால், வயதானவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் வெயிலில் நீண்டநேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல, மழைக்காலத்திலும் கார்டுதாரர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, செவிலிமேடு ரேஷன் கடையில், கார்டுதாரர்கள் பில் போடும் இடத்தில் கூரை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை