உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அந்தரத்தில் ஊசலாடும் ஜன்னல் கதவு பீதியில் பள்ளி மாணவர்கள்

அந்தரத்தில் ஊசலாடும் ஜன்னல் கதவு பீதியில் பள்ளி மாணவர்கள்

திருமால்பூர்: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், திருமால்பூர் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.மாணவர்களின் நலன் கருதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வகம் மற்றும் வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதில், இரண்டாவது மாடி கட்டடத்தின் ஜன்னல் கதவு உடைந்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.இந்த கதவுகள் மாணவ - -மாணவியர் மீது விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை