உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செங்கை பஸ் நிலைய பணிகள் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அப்டேட்

செங்கை பஸ் நிலைய பணிகள் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அப்டேட்

சென்னை, : செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்துக்கான அஸ்திவார பணிகள் முடியும் நிலையில் உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கோயம்பேடு, மாதவரம், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில், சி.எம்.டி.ஏ., புதிய பேருந்து நிலைய திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.இதன் அடிப்படையில், அடுத்த கட்டமாக செங்கல்பட்டு, மாமல்லபுரம் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள், சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், செங்கல்பட்டில் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்க, நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதன்படி, இங்கு, 14 ஏக்கர் நிலத்தில், 97 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.அரசின் ஒப்புதலுடன் நிலம் பெறப்பட்டு, புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள், சில மாதங்களுக்கு முன் துவங்கின. இந்நிலையில், தற்போது, 9.95 ஏக்கர் நிலத்தில், பேருந்து நிலையத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.இது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: செங்கல்பட்டில், 14 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, அங்கு நிலம் சமன்படுத்தப்பட்டு, அஸ்திவாரத்துக்கான துாண்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட உயரதிகாரிகள், இப்பணிகளை நேரில் பார்வையிட்டனர். ஒரே சமயத்தில், 46 பேருந்துகள் வந்து செல்லும் வகையில், இங்கு நடைமேடைகள் அமைக்கப்படும்.மேலும், 61 பேருந்துகள், 782 இருசக்கர வாகனங்கள், 67 கார்கள் நிறுத்துவதற்கான இட வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து, சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பேருந்துகள், இங்கு இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி